தளபதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்துக்கு சென்சார் போர்டு 'செக்' வச்சதுல இருந்து, பாவம் விஜய் ரசிகர்கள் எல்லாம் ரொம்ப அப்செட்-ல இருந்தாங்க. "பொங்கலுக்குத் தலைவர் வர்றாரே"ன்னு ஆவலா இருந்தப்போ, கோர்ட் ஜனவரி 21 வரை தடை போட்டதுல மொத்த பிளானும் சொதப்பிருச்சு. ஆபிஷியலா பொங்கல் ரிலீஸ் இப்போ 'கேள்விக்குறி' ஆகிடுச்சு. இதனால் சோக கீதம் பாடிக்கிட்டு இருந்த ரசிகர்களுக்கு, ஒரு 'மாஸ்' அப்டேட்டை குடுத்து குஷிப்படுத்தியிருக்காரு தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ். தாணு. ஆமாங்க, தளபதியோட மெகா ஹிட் மூவி 'தெறி' படம் இப்போ தியேட்டர்களில் 'ரீ-ரிலீஸ்' ஆகப்போகுது!
நிஜத்தைச் சொல்லப்போனா, 'ஜனநாயகன்' ரிலீஸ் ஆகாதது ரசிகர்களுக்கு மட்டுமில்ல, தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெரிய தலைவலிதான். பொங்கல் நேரத்துல பெரிய படங்கள் இல்லைன்னா பிசினஸ் படுத்துருமேன்னு பயந்தாங்க. நடுவுல 'பராசக்தி' படத்தை வாங்கி ஓட்டலாம்னு பார்த்தா, அந்தத் தரப்பு படத்தைத் தர மறுத்துட்டாங்க போல. "என்னடா பண்றது?"ன்னு யோசிச்சப்போ தான், தாணு சார் தன்னோட பழைய 'தெறி' ஆயுதத்தைக் கையில எடுத்திருக்காரு. ஏற்கனவே 'கில்லி', 'சச்சின்' படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி 'பிளாக் பஸ்டர்' வசூல் செஞ்சது நமக்குத் தெரியும். அதுலயும் 'கில்லி' வசூல் வேட்டை எல்லாம் வேற லெவல்!
இப்போ அதே பாணியில, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'தெறி' படத்தை ரிலீஸ் பண்ணப் போறாங்க. "தளபதி புதுப் படத்துல வரலன்னா என்ன... பழைய படத்துலயே வந்து தியேட்டரைத் தெறிக்க விடுவாரு"ன்னு ரசிகர்கள் இப்போவே போஸ்டர் அடிக்கத் தொடங்கிட்டாங்க. தியேட்டர் ஓனர்களும் "அப்பாடா... தளபதி படம் வந்தா போதும், கூட்டம் கன்பார்ம்!"னு நிம்மதிப் பெருமூச்சு விடுறாங்க. சமந்தா, எமி ஜாக்சன், அப்புறம் நம்ம 'தளபதி பேபி' நைனிகான்னு அந்தப் படமே ஒரு தனி வைப் தான். பொங்கல் ரேஸ்ல புதுப் படங்கள் கோட்டை விட்டாலும், விஜய் தன்னோட ரீ-ரிலீஸ் மூலமா 'கிங்'னு நிரூபிக்க ரெடியாகிட்டாரு.
கடைசிப் படம்னு சொல்லப்படுற 'ஜனநாயகன்' ரிலீஸ் ஆகுறதுல பல சட்ட சிக்கல்கள் இருந்தாலும், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை நிறுத்தப்போறதில்ல. "ஊசி போற இடத்தை பாக்குறவங்க... உலக்கை போற இடத்தை பாக்கல"ங்கிற மாதிரி, ஜனநாயகம் படத்தை நிறுத்தலாம் ஆனா விஜய்யோட வசூல் வேட்டையை யாராலயும் நிறுத்த முடியாதுன்னு தியேட்டர் வட்டாரத்துல பேச்சு ஓடுது. மொத்தத்துல இந்த வருஷம் பொங்கல், தளபதி ரசிகர்களுக்கு 'தெறி' பொங்கலா தான் இருக்கப்போகுது. அடுத்த வாரத்துல இருந்தே 'ஜித்து ஜில்லாடி' பாட்டு தியேட்டர்கள்ல அதிரப்போறது உறுதி!
